AFCA பற்றியது
ஆஸ்திரேலிய நிதி முறைப்பாடுகள் அதிகாரசபை (AFCA) ஒரு சுயாதீனமான, இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஸ்தாபனமாகும்.
வருமான உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய முறைப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தனிப்பட்டவர்களுக்கும், சிறு வியாபாரமுயற்சிகளுக்கும் நாம் உதவுகிறோம்.
அதிக விடயங்களைக் கொண்ட நிதிப்பிரச்சினைகளின் மீது நாம் கரிசனை கொள்ள முடியும், பின்வருவன அடங்கலாக:
- வங்கிக் கொடுக்கல் வாங்கல் தவறுகள் மற்றும் கடன் நிரலீடுகள்
- தங்களின் நிதி நிலவரம் மாறிவிட்டபோது, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கஸ்டம், கடன் அட்டைகள் மற்றும் குறுகியகால நிதி
- காப்புறுதிக் கோரிக்கையின் மறுப்பு ( கார், வீடு மற்றும் பொருட்கல், செல்லப்பிராணிகள், பிரயாணம், வருமான பாதுகாப்பு மற்றிம் உணர்வதிர்ச்சி)
- பிழையான முதலீட்டு ஆலோசனை
- ஓய்வுகால வருவாயின் பங்கீடு குறித்து ஒரு நம்பிக்கைப்பொறுப்பாளியின் தீர்மானம்.
இலவச உரைபெயர்ப்பாளர் சேவைக்கு நாங்களும் ஒழுங்கு செய்யலாம்
உங்கள் நிதி நிறுவனத்துடன் நீங்கள் நேரடியாக உங்கள் முறைப்பாட்டைத் தீர்துக்கொள்ள முடியாதுபோனால், AFCA யுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
செலவில்லாமலும், நீதிமன்றத்திற்குப் போவதால் வரும் மன உழைச்சல் இல்லாமலும் உங்கள் முறைப்ப்பாட்டைத் தீர்ப்பதற்கு நாங்கள் உதவுவோம். நீங்கள் விரும்பாது விட்டால், ஒரு முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கையில், சட்ட அல்லது வேறு ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை கிடையாது.
நிதி நெருக்கடியை நான் அனுபவித்தால் நான் என்ன செய்ய முடியும்?
சில வேளைகளில், கடன் வசதியின் கீழ், மீள்கொடுபனவு வேண்டுகோள்களைச் சமாளிக்க முடியாமல் தனிப்பட்டோரும், சிறிய வியாபாரிகளும் இருக்கிறார்கள் (வீட்டுக்கடன், வியாபாரக்கடன் அல்லது கடன் அட்டை போன்றவை). இதை நிதி நெருக்கடியென நாம் அழைப்போம்.
நிதி சிக்கலைச் சமாளிப்பதற்கு ஒரு வழிகாட்டி
தேசிய 'ரிலே' சேவை
இலவச உரைபெயர்ப்பாளர் சேவைக்கு நாங்களும் ஒழுங்கு செய்யலாம் 131 450 இல் இலவச உரைபெயர்ப்பாளரை அல்லது 1800 931 678* இல் எங்களை அழையுங்கள் (மெல்போர்ன் நேரப்படி காலை 9 இலிருந்து மாலை 5 வரை திங்கள் தொடக்கம் வெள்ளிவரை) நாங்கள் உங்களுக்காக, ஒரு உரைபெயர்ப்பாளரை ஒழுங்குபடுத்துவோம்.
எம்முடன் தொடர்புகொள்ளவும்
எமது உத்தியோகத்தருடன் பேசுவதற்கு 1800 931 678* ஐ அழைக்கவும்.
*மெல்போர்ன் நேரம் காலை 9 இலிருந்து மாலை 5 வரை அவுஸ்திரேலியாவில், வீட்டுத்தொலைபேசியில் இந்த இலக்கத்தை அழைப்பது இலவசமானது. கையடக்கத்தொலைபேசிக்குக் கட்டணம் அறவிடப்படலாம், உங்கள் சேவை வழங்குனரிடம் தயவுசெய்து சரிபார்க்கவும்.
உபயோகமான தகவல்கள்
- ஒரு சிறிய வியாபார முறைப்பாட்டைத் தீர்ப்பது எவ்வாறு
- முறைப்பாட்டுப் படிவம் - அச்சிடக்கூடிய பதிப்பு
- இணங்கம்காணும் மாநாடுகளுக்கான வழிகாட்டி
- நிதி சிக்கலைச் சமாளிப்பதற்கு ஒரு வழிகாட்டி
- ஒரு சிறிய வியாபார முறைப்பாட்டைத் தீர்ப்பது எவ்வாறு
எமது சேவை பற்றிய பின்னூட்டம்.
உங்களுடைய பின்னூட்டத்தை நாங்கள் மதிக்கிறோம் எமது சேவை பற்றிய முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் முறைப்பாடுகள் நாம் மேம்பட உதவுகின்றன.
எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பான சேவையை வழங்குவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்கிறோம், ஆனால் சிலவேளைகளில் விடயங்கள் பிழையாகிவிடுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இது நிகழ்ந்தால், நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
AFCA - இனுடைய சேவை பற்றிய பின்னூட்டமும், முறைப்பாடுகளும்
ஏனைய தொடர்பு விபரங்கள்
Australian Financial Complaints Authority
GPO Box 3
Melbourne VIC 3001
மின்னஞ்சல்: info@afca.org.au
தொலை நகல்: (03) 9613 6399
இணையதளம்: www.afca.org.au
ஒலி நாடாவை காதுகொடுத்துக் கேளுங்கள்: AFCA எவ்வாறு உதவலாம்
வர்த்தகப் பொருள் அல்லது சேவை பற்றிய முறைப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள AFCA எவ்வாறு உதவுகிறதென்பதையும், மற்றும் நாம் கவனிக்கக்கூடிய முறைப்பாடுகளின் வகைகளையும் ஒர் ஒலி நாடா விபரிக்கிறது.
முறைப்பாட்டுப் படிவம் - அச்சிடக்கூடிய பதிப்பு
எழுத்தில் அதை அச்சிட்டுப் பூர்த்திசெய்ய நீங்கள் விரும்பினால், இந்த AFCA முறைப்பாட்டுப் படிவ வெளியீட்டைப் பாவிக்கவும். அறிவுறுத்தல்கள் படிவத்தில் வழங்கப்படுகிறது.